• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

கோவையில் மழைநீர் தேக்கம்… தேங்கிக் கிடக்கும் வளர்ச்சிப் பணிகள்..,

BySeenu

Oct 29, 2026

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வர உள்ள நிலையில் மாநகராட்சியில் செய்ய வேண்டிய அடிப்படை தேவைகளை வேண்டுமென்றே தவெக அரசு செய்யாமல் கடந்தகால திமுக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள் என திமுக தீர்மானக்குழு மாநில செயலாளரும், முன்னாள் மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான நா.கார்த்திக் Ex Mla கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சிக் காலத்தில் கோவையில் செம்மொழிப் பூங்கா, ஜி.டி. நாயுடு மேம்பாலம், பெரியார் நூலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டவர், தற்போதைய நிர்வாகத்தில் பல பணிகள் முடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

கோவையில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழைக்காலத்திற்கு முன்பாக ஓடைகள், ராஜா வாய்க்கால் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை முறையாகத் தூர்வாராததே இதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டப்படியவர், பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதுடன், கோவை கிழக்கு மண்டலத்தில் நூற்றுக்கணக்கான பணிகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை காலங்களில் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற வில்லை என்றும், சங்கனூர் ஓடை உள்ளிட்டவைகள் தூர்வாரப்பட வில்லை என்றும் குற்றம் சாட்டியவர், அதிகாரிகள் மெத்தன போக்கோடு செயல்படுவதாகவும், ஏற்கனவே மாநகராட்சி ஆணையாளர் இடத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டினார். பொதுவாகவே இந்த தவெக அரசு செயல் இழந்து காணப்படுவதாக குற்றம் சாட்டினார்.