• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சொத்து விவரத்தை பதிவேற்ற நீதி மன்ற ஊழியர்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்..,

ByKalamegam Viswanathan

Oct 29, 2026

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 1973 சட்ட விதியை குறிப்பிட்டு கடந்த ஆகெஸ்ட் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஐ.எப.ஹச்.ஆர்.எம்.எஸ் தன் இணைய தரவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் அப்படி பதிவேற்றம் செய்யவில்லை என்றால் பதவி உயர்வு கிடையாது என்றும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் மதிப்புமிகு முனைவர் மு.சாய்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இதனை வரவேற்கிறோம் ஆனால் பதிவேற்றம் செய்வதில் பலருக்கு புரிதல் இல்லா நிலை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அசையா மற்றும் அசையும் சொத்து மற்றும் கடன் பெற்ற விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதாக குறிப்பிட்டாலும் பல அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் 2025 ஆம் ஆண்டு பெறப்பட்ட கடன் மற்றும் சொத்து விவரத்தை மட்டும் பதிவு செய்தால் போதுமானது என்று நினைத்து அதை மட்டும் பதிவேற்றம் செய்துள்ளனர். இது பெரும்குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது அலுவலக ஊழியர்களுக்கே பல சந்தேகங்களை ஏற்படுத்துவதால் பதிவிடுவதில் தினருகிறார்கள் இது போன்ற தவறுகளை திறுத்தம் செய்யும் முறையை ஏற்படுத்த வில்லை தமிழிலும் தெரிந்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படவில்லை இதனால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்து நீதிமன்ற ஊழியர்களுக்கு சொத்து விவரம் மற்றும் கடன்பெற்ற விவரத்தை பதிவேற்ற கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சென்னை பெருநகர மாநகர் நீதிமன்றம் அனைத்து நீதிமன்ற ஊழியர்கள் ஐ.எப்.ஹச்.ஆர.எம்.எஸ் இணைய தரவில் பதிவேற்றுவதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நீதிமன்ற சுற்றறிக்கையை பின்பற்றி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களும் எளிதில் புரிந்துக் கொள்ளும் விதமாக பதிவேற்றும் தரவுகளை தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பதுவேற்றும் முறையை உருவாக்கி கால நீட்டிப்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களையும் , நிதித்துறை அமைச்சர் மாண்புமிகு மரிய வில்சன் அவர்களையும் , தலைமைச் செயலாளர் மதிப்புமிகு முனைவர்.மு.சாய்குமார் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.