• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் சத்திரப்பட்டி பகுதியில் தேமுதிக தலைவரும் நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி

ByKalamegam Viswanathan

Dec 29, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் லோடுமேன் சங்கம் சார்பில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பெண்கள் ஒப்பாரி வைத்தனர். அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் குருசாமி, ரமேஷ், பெருமாள், கந்தசாமி ஆகியோர் மொட்டை அடித்து அஞ்சிலி செலுத்தினர். லோடுமேன் சங்க தலைவர் அர்ஜுன் மொட்டை அடித்த நான்கு பேருக்கும் புது துணி எடுத்து கொடுத்து துக்கத்தை அனுசரிக்கும் விதமாக, கண்ணீர் விட்டு அழுது பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். கேப்டன் இறப்பு எங்களுக்கு பேரிழப்பு, அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறதாக தெரிவித்தனர்.