• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை

Byகாயத்ரி

Aug 22, 2022

புதுச்சேரி மாநில பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் ரங்கசாமி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் பாரதியார் பல்கலைகழக கூடத்தில் ரூபாய் 11.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு கழகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 80 கோடி செலவில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்ட பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்ட வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தனியார் பங்களிப்புடன் மீண்டும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.