மதுரையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரௌடி மீது காலில் துப்பாக்கி சூடு – காயமடைந்த காவலர் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு ஆளான ரவுடி இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதி.
மதுரை வளர்நகர் அருகே ராஜிவ்காந்தி நகர் பகுதியில் கடந்த 22ஆம் தேதி உலகனேரியை சேர்ந்த பாலமுருகன் என்ற டோராபாலா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கினை மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.இதில் முதல் குற்றவாளியாக பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரௌடியான உலகனேரியை சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்து கொலை சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் பதுங்கியிருந்த பகுதி குறித்து அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். மதுரை வண்டியூர் பகுதிக்கு வினோத்தை காவல்துறையினர் அழைத்துசென்று அடையாளம் காட்டியபோது திடிரென அங்கு பதுக்கிவைத்திருந்த அரிவாளால் முதல்நிலை காவலர் சரவணகுமாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார் அப்போது அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் ராஜாங்கம் ரவுடி வினோத்தின் வலது காலில் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தார். இதனையடுத்து காயமடைந்த ரவுடி வினோத்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.காவல்துறையினரை வெட்ட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]