• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் திமுகவினர் ஆட்டோவுடன் வந்து விருப்ப மனு அளித்தனர்

Byகுமார்

Nov 29, 2021

மதுரை மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.கவினர் 50க்கும் மேற்பட்ட ஆட்டோவுடன் வந்து மகளிர் அணி சத்தியா அழகுராஜாவிடம் விருப்ப மனு கொடுத்தனர்.

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வெற்றி வாய்ப்பு கைப்பற்ற, சரியான நபர்களை தேர்வு செய்து, களமிறக்க அரசியல் கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திமுக சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் விண்ணப்பங்கள் கொடுக்கலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்தனர்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட திமுக சார்பில் விருப்ப மனு அளித்து வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்பும், மதுரை மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட தி.மு.க.,வினர், விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என மதுரை மாவட்ட கழகம் அறிவித்தனர். இதையடுத்து மதுரை மாநகராட்சி வார்டு 52 பகுதியை சேர்ந்த சத்யா அழகுராஜ் தனது ஆதரவாளர்களுடன் 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் சுமார் 200க்கும் மேற்பட்டோருடன் வந்து, மதுரை காக்கா தோப்பு மதுரை தெற்கு திமுக அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தனர். இதில் ஏராளமான மகளிர் அணிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.