• Tue. Apr 30th, 2024

குமரியில், நெல்லையை சேர்ந்த 3_காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் கனிமொழி

.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் உடன் ஒரு சட்டமன்றத் தொகுதியான விளவங்கோடு இடைத்தேர்தலும் நடக்கும் நிலையில், தமிழகமே திரும்பி பார்க்கும் ஒற்றை மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது.

திமுக-வின் மாநில மகளிர் அணி தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நெல்லை மாவட்டத்தில் 2-இடங்களிலும், குமரி மாவட்டத்தில் 5_பிரதான இடங்களில் மக்கள் திரள் கூட்டங்களில் 2- காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு “கை”சின்னத்தில் ஆதரவு திரட்டினார்.

நெல்லை ராதாபுரம் பகுதியில் முதல் பிரச்சாரத்தை ராபர்ட் பூரூஸ்யை ஆதரித்து திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் ,ராதாபுரம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் பூரூஸ் உடன் இரண்டுபகுதிகளில் திறந்த வாகனத்தில் கனிமொழி பிரச்சாரத்தை, தொடங்கினார். அதனை அடுத்து அங்கிருந்து விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பட்டிற்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இரண்டு சந்திப்புகளில், காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னத்தில் வாக்குகள் கேட்டதுடன். விளவங்கோடு தொகுதியின் கடந்த கால வரலாறு.மூன்று முறை காங்கிரஸ்யில் போட்டி இட்டு வெற்றி பெற்ற ஒரு பெண் (பெயரை குறிப்பிட்டாமல்) புதிய கட்சிக்கு தாவியவருக்கு பாஜக வின் பாராமுகம் நிலையையும் விவரித்தவர் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் நிற்கும் பெண் வேட்பாளரால், குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் அரோக்கியபுரம் வரை உள்ள நம் மீனவ சகோதரர், சகோதரிகள் பெற்றிருக்கும் இரட்டை மகிழ்ச்சி அதன் எதிரொலி வாக்குகள் குவிவது சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டுமே அல்ல. நாகர்கோவிலில் மக்களவை வேட்பாளர் தம்பி விஜய் வசந்த் குமரி மக்களவையில் ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்யப்போகும், தம்பி விஜய் வசந்திற்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.என புன்னகை மின்ன குழித்துறை சந்திப்பில் விஜய் வசந்திற்கு ஆதரவு கேட்டு பேசிய போது தெரிவித்தார்.நாகர்கோவில், வடசேரி அண்ணா சிலை அருகே நடந்த வாகனப்பிரச்சாரத்திலும் இரவு கொட்டாரம் பெரும் தலைவர் காமராஜர் சிலை சந்திப்பு கூட்டத்திலும். விஜய் வசந்திற்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

பிரதமர் அவரது பத்து ஆண்டுகள் ஆட்சியின் இறுதி நொடிகளில் திடிரென்று ‘கச்சதீவு’பற்றி நினைவு வந்து பேசுவதை கேட்கும் போது புன்னகை தான் வெளிப்படுகிறது என தெரிவித்தார்.

கனிமொழி நிகழ்வுகள் எல்லாவற்றிலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் டாக்டர் பினுலால்,கே.டி. உதயம் திமுகவின் அகஸ்தீசுவரம் பேரூராட்சி செயலாளர் பாபு ஆகியோர் கனிமொழி நிகழ்வில் முழுமையாக பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *