அ தி மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆகிட வேண்டியும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உள்ள தங்க தேரினை முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான கே.டி. பச்சைமால் அவர்கள் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், முன்னாள் அ.தி.மு.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் , அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவரும் முன்னாள் ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணகுமார், உள்ளிட்ட அ.தி.மு.க கட்சியினர் பலர் கலந்து கொண்டு தங்க தேர் பிடித்து இழுத்து பகவதி அம்மனை வழிபட்டனர்.
அதிமுக வின் ஆட்சி மீண்டும் அமைய அதிமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம்,மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கத்தை நடந்த வேண்டுதல் தங்கத்தேர் இழுப்பு.குமரி அதிமுகாவின் கோஸ்ட்டியை துல்லியமாக காட்டுவதாக பொது நிலையில் உள்ள அதிமுகவினரது கருத்தாக உள்ளது.