மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் நுகர்வோருக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் ஊரகப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.200 மதிப்பிலான ஒருங்கிணைந்த சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனையை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.,

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ
தங்கப்பாண்டி, சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வழங்கினர்.,

இதில் கடலை பருப்பு, பாசிப்பருப்பு, மிளகாய் வத்தல், மல்லி, பூண்டு என பத்து பொருட்கள் அடங்கிய 1.45 கிலோ எடையில் தொகுப்பினை வழங்கினர்.,
இதில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.,
