• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுகவில் ஸ்டாலின் நினைத்தால் கூட பொதுச்செயலாளர் ஆகலாம்- டிடிவி தினகரன்

Byகாயத்ரி

Jul 30, 2022

மதுரையில் அமமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து பேசிய அவர், தற்போது மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச்செயலாளராக ஆக முடியும்; அந்த அளவிற்கு தான் அதிமுக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் மடியில் டன் கணக்கில் பயம் உள்ளது. காக்கிசட்டைக்கே அஞ்சும் ஈபிஎஸ் அணியினர் லஞ்ச ஒழிப்புத்துறை என்றால் என்ன ஆவார்கள். அதிமுக பற்றி அமமுக பேச வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை. யாரிடமும் சமரசம் கிடையாது; அம்மாவின் ஆட்சியை மீட்பது தான் ஒரே இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.