மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதால், தேர்தல் விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி, புனே கேட் சிவபூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் இருந்தபோது கணக்கில் வராத 5 கோடி ரூபாயுடன் வந்த சொகுசு காரை மடக்கி பிடித்து பணத்தைக் கைப்பற்றினர். அதில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கமான எம்எல்ஏவுக்கு சொந்தமானது என சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
