• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஹீரோக்கள் அறைகளுக்கு நான் போகததால் புறக்கணிக்கப்படுகிறேன் – கங்கணா

தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்தித்தில் நடித்தவர் தற்போது சந்திரமுகி – 2ல் நடித்து வருகிறார் கங்கணா ரணாவத்இந்திய சினிமாவில் எப்போதும் ஒரு பிரச்சினையை தோளில் போட்டு திரியும் நடிகை இவராகத்தான் இருக்க முடியும்

சமூக வலைதளத்தில் அரசியல், சினிமா, பெண்கள் உரிமை, ஆணாதிக்கம் பற்றி தயக்கம் இன்றி கருத்துக்களை பதிவு செய்வது இவரது வழக்கம் தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி என எல்லா மொழிகளிலும் நட்சத்திர நடிகர்களின் வாரிசுகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் நடிகைகளை பொறுத்தவரை புதிது புதிதாக வருகின்றனர் இது சம்பந்தமாக கங்கணா ரணாவத்இந்தி திரையுலகில் வாரிசு நடிகர் நடிகைகள் ஆதிக்கம் இருப்பதாக ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தார்.தற்போது கதாநாயகர்கள் மீது புகார் தெரிவித்து இருக்கிறார்.ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கங்கனாரணாவத்கூறியதாவது

“நான் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன். மதிப்பு குறைவான எந்த காரியத்தையும் செய்யக் கூடாது என்று எனது தாயார் கற்றுக்கொடுத்து இருக்கிறார். இது ஆணவமா அல்லது நேர்மையா என்று சொல்லுங்கள்.நான் மற்ற பெண்கள்போல் கிசுகிசுக்கள் எதிலும் சிக்குவது இல்லை. எனது தாயார் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையோடு வாழ கற்றுக்கொடுத்து இருக்கிறார். அதனால்தான் நான் கிசுகிசுக்களில் சிக்குவது இல்லை.மற்றவர்களைப்போல் ஹீரோக்கள் அறைகளுக்கு செல்வது இல்லை. இதனால் இந்தி சினிமா மாபியாக்கள் என்னை தனிமைப்படுத்தி ஒதுக்குகிறார்கள்” என்றார்