• Tue. May 7th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 23, 2023

நற்றிணைப் பாடல் 255:

கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ! மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,
திருமணி அரவுத் தேர்ந்து உழல, உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!

பாடியவர்: ஆலம்பேரி சாத்தனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

பேயினங்கள் விளக்கமுற இயங்காநிற்ப, இவ் விராப்பொழுதெல்லாம் ஊர்முழுதுந் துயில் கொள்ளாநின்றது; கேட்போர் அச்சம் பொருந்துதற்குரிய தன்மையுடனே குறிஞ்சியென்னும் பண்ணைப் பாடிக்கொண்டு அகன்ற இவ்வூரைக் காத்தலையுடைய கானவர் யாரும் துயில்வாரல்லர்; வலிய களிற்றியானையொடு பொருத வாள்போலுங் கோடுகளையுடைய புலி துறுகல் மிக்க மலையடியினின்று முழங்கா நிற்கும்; ஐயோ! ஓங்கிய மலைவழியில் உயர்ந்த மலைப்பக்கத்தில் விளங்கி மின்னி மழை பெய்தலை மயங்கி நிற்கின்ற காலம் நீட்டித்த இரவு நடுயாமத்து; பாம்பு தன்செவியிற் படுதலும் தன்னிடத்துள்ள அழகிய நீலமணியைக் கக்கி வருந்தி உழலுமாறு சினங்கொண்டு இடி முழங்கி மோதாநிற்கும்; இப்பொழுது மெல்லிய தோள் தளர்வுற்று நாம் வருந்துவதாயினும் அவர் இங்கு வாராராயிருத்தலே மிக நல்லதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *