• Tue. Dec 10th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Aug 17, 2023

நற்றிணைப் பாடல் 232:

சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்
சோலை வாழை முணைஇ அயலது
வேரல் வேலிச் சிறுகுடி அலறச்
செங்கால் பலவின் தீம்பழ மிசையும்
மாமலை நாட தாமம் நல்கென
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை
வீயுக விரிந்த முன்றில்
கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே.

பாடியவர்: முதுவெங்கண்ணனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

 சிறிய கண்ணும் பெரிய கையும் கொண்ட யானை இனத்தின் ஆணும் பெண்ணுமாகிய இரண்டு குளவி மலர் பூத்துள்ள குளத்தில் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு சேர்ந்திருந்த பின்னர், அங்குச் சோலையில் இருந்த வாழையைத் தின்பதில் வெறுப்பு கண்டு, அதனை அடுத்து மூங்கிலில் வேலி போடப்பட்டிருந்த பலாம்மழத்தைத் தோண்டித் தின்னும் பெருமலை நாடனே! கேள். 
கல்லுப் பாறைகளும் மூங்கிலும் சிறைந்த எங்கள் ஊர் பாக்கத்தில், வேங்கை மலர் கொட்டிக்கிடக்கும் முற்றத்தைக் கொண்ட எம் தந்தையின் இல்லத்தில் தங்கிச் செல்ல விரும்பினால், இவளை மணந்துகொண்டு காம இன்பம் தருமாறு வேண்டுகிறேன். இவ்வாறு தோழி தலைவனிடம் கூறுகிறாள்.