• Sat. Feb 15th, 2025

குறுந்தொகைப் பாடல் 5:

Byவிஷா

Jan 17, 2025

அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே. 

பாடியவர் : நரிவெரூ உத்தலையார்
திணை: நெய்தல்

பொருள்:

தோழியே! இதுதான் காதல் என்பதோ! தன் துணையை விட்டு பிரிந்து தங்குவதற்கு ஏற்ற இனிய நிழலை உடைய புன்னை மரம் உள்ளது. ஆனால் அதன் அருகிலேயே கரையை உடைக்கிற அலையை உடைய நீர்த்திவலையால், உண்ணுகிற தன்மை உடைய பல இதழ்களை உடைய தாமரை பூ பூத்து இருக்கிறது. அது போன்ற என் கண்கள், மெல்லிய கடற்கரையை உடைய என் தலைவன் பிரிந்ததால் என் கண்கள் மூட மறுக்கிறதே.