காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க மதுரைக்கு விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் ரவி, முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் பலர் வரவேற்றனர்.
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் பட்டமளிப்பு விழா துவங்கியது. நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
இளையராஜாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம்.. பிரதமர் மோடி வழங்கினார்
