• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சென்னை திரும்பினார் இளையராஜா..

ByA.Tamilselvan

Jul 19, 2022

பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்ற இளையராஜா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். அவருக்கு பாஜக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த இளையராஜா, நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பினார்.சென்னை விமான நிலையம் வந்த இளையராஜாவை பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நான்கு எம்எல்ஏக்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.இயக்குநர் பாரதிராஜா, கங்கை அமரன், ஆர்.கே செல்வமணி, சினிமா இசைக் கலைஞர்கள் சங்கம், மற்றும் ரசிகர்கள் சார்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
புதிதாக அறிவிக்கப்பட்ட நியமன எம்பிக்கள் சிலர் நேற்று பதவி ஏற்ற நிலையில், இளையராஜா நேற்று பதவி ஏற்கவில்லை. மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் விரைவில் இளையராஜா விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.