திரைப்பட தயாரிப்பாளரும். திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின், முன்னாள் உதவியாளருமான மற்றும் ‘ புலி’ படத்தின் தயாரிப்பாளருமான
பி.டி.செல்வகுமார்.

குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு,கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அவரது சொந்த நிதியில் புதிய வகுப்பறை கட்டிக்கொடுத்துள்ளார்.
புதிய வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை. குமரி மாவட்டக்கல்வி அலுவலர் ஜெயராஜ் தலைமையில் புதிய வகுப்பறைகள் கட்டிடத்தை. பி.டி.செல்வகுமார்
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திறப்பு விழா நிகழ்விற்கு பின்.இவ்வாண்டு நல்லாசிரியர் விருது பெற்ற இருபால் ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு கேடயங்களை. அய்யா வழி பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார் வழங்கினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி பங்கு பெற்றார். நிகழ்வில் பேசிய விருந்தினர்கள். பயிலும் காலம் ஒரு தவக் காலம் போன்றது. மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.அரசியல் வாதிகளின் பேச்சில் மயங்கிவிடாதிர்கள்.
படிப்பு,படிப்பு என்பதில் மாணவர்கள் கவனமாக இருங்கள்.
கை பேசி இன்றைய கல்விக்கு ஒரு துணையாக இருக்கிறது, இதற்காக மாணவர்கள் முழுநேரமும் கை பேசியில் மூழ்கி கிடக்காதிர்கள் என பலரும் பேசினார்கள்.








