• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாட்ஸப்பில் மெசேஜை டெலிட் செய்தால் உடனே அன்டூ செய்யும் வசதி

Byவிஷா

May 23, 2024

வாட்ஸப்பில் வரும் மெசேஜ்களை டெலிட் செய்தால் அதனை உடனே அன்டூ செய்யும் புதிய வசதியை வாட்ஸப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர். பயனாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக மெட்டா நிறுவனம் புதுபுது வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இப்போது ஒரு மெசேஜை டெலிட் செய்தால் உடனே அதை அன்டூ செய்து கொள்ளும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப்பில் Delete For Everyone-க்கு பதிலாக Delete For Me கொடுத்துவிட்டால் போதும், உடனே அந்த மெசேஜ் தேவைப்பட்டால் அன்டூ செய்து கொள்ளலாம். இதனால் இனி அவசரப்பட்டு Delete For Me கொடுத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது என வாட்ஸ்அப் பயனர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.