• Mon. Dec 9th, 2024

தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

Byவிஷா

May 23, 2024

இன்று காலை நிலவரத்தின்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.54,000க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்த தங்கம் விலை, இன்று விலை அதிரடியாக குறைந்து விற்பனையாகி வருகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 110 ரூபாய் குறைந்து, ரூ.6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ரூ.54,000-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,619-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 90 ரூபாய் குறைந்து, ரூ.5,529-க்கு விற்பனை செய்யப்படுகிறது
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 1,00,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 3,300 ரூபாய் குறைந்து, ரூ.97,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.97.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.