• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் அறிவிப்பு

Byவிஷா

Mar 30, 2024

வணிகர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது..,
ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்களால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வணிகர்களை பாதுகாக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வணிகர்கள், வியாபாரிகளிடம் மட்டுமே பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. வரும் 2-ம் தேதி இதுதொடர்பாக தேர்தல் ஆணையரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் ஏப்.3-ம் தேதியில் இருந்து தேர்தல் நாளான 19-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மளிகைக் கடைகளையும் அடைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.