• Fri. Apr 26th, 2024

“தை பிறந்தால் வழி பிறக்கும்” ?

ByA.Tamilselvan

Jan 15, 2023

“தை பிறந்தால் வழி பிறக்கும்” – என்ற பழமொழி, என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், இதில் எவ்வளவு செய்திகள் அடங்கி இருக்கின்றன என்பது தெரிந்துகொள்ளுங்கள்.
(க) அண்ட பேரண்டங்களிலிருந்து மூலப் பதினெண்சித்தர்களும், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புக்களும் அவர்களது துணைவர்களும் இவ்வுலகுக்கு வந்து கற்பாறைகள் மேல் தங்கி தங்களுடைய ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். அந்த நிகழ்ச்சி தை மாதத்தில்தான் நடந்தது.
(ஙு) ஆதிசிவனார் இம்மண்ணுலகுக்கு வந்த காலம் தை மாதமேயாகும்.
(சு) ஆதிசிவனார் இப்பாரில் (பார் + உலகம்) வாழ்ந்து கொண்டிருந்த (வதிந்து கொண்டிருந்த = வசித்துக் கொண்டு இருந்த) பெண்ணான பார்வதியை (பார் + வதி = இவ்வுலகத்தைச் சேர்ந்த பெண்) மணந்து கொண்டது தை மாதத்தில்தான் (தைப்பூச நாளில்). அதுவும் தைப்பூச நாளன்று.
(ரு) ஆதிசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த முருகன் தை மாதத்தில்தான்; தைப்பூச மீனில்தான், தைப்பூச யோகத்தில்தான் பிறந்தான்.
(சூ) தைமாதத்தில்தான் திருப்பாற்கடல் கடையப்பட்டு இலக்குமியும், அமுதும், ஆலகால நஞ்சும் வெளிப்பட்டனர்.
(சா) தேவாசுரப் போர் தைமாதத்தில்தான் துவங்கியது. தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் மீண்டும் மீண்டும் இடைவெளி விட்டு தைமாதத்திலேயே நிகழ்ந்தது தேவாசுரப்போர். இந்தப் போர் முடிவுக்கு வந்ததும் தைமாதத்தில்தான்.
(அ) முருகன் தேவாசுரப் போரை நிகழ்த்திட அருட்படை (தேவர்களுடைய படை) சேனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றதும் தை மாதத்தில்தான்.
(கூ) முருகன் தெய்வானையை மணந்ததும், வள்ளியை மணந்ததும் தை மாதத்தில், தைப்பூசத்தில்தான்.
(ய) ஆதிசிவனார், இளமுறியாக் கண்டம் எனும் குமரிக் கண்டத்தில் திருவிடம் என்ற தீவை தேர்ந்தெடுத்து இந்து வேதத்திற்காகவும், இந்து மதத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் செயல்படத் துவங்கியது தை மாதத்தில்தான்.
(க) ஆதிசிவனார் திருவிடம் எனும் தீவில் தமிழ்மொழிக்காக மருதமரக் காடுகள் இருந்த பகுதியில் மதுரை மாநகரை உருவாக்கத் தொடங்கியதும்; இந்து நதிக் கரையில் இந்து வேதத்திற்காக ‘அருட்பா’ எனும் நகரை உருவாக்கத் துவங்கியதும் அதையடுத்து இந்து மதத்திற்காக ‘மோகம்சிதறா’ நகரை உருவாக்கத் தொடங்கியதும் தை மாதத்தில்தான். ஆனால், இம்மூன்றையும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தான் அமைத்தார். அதாவது முதலில் முத்தமிழ்ச் சங்கம் நிறுவுவதற்காக மருதை மாநகரை உண்டாக்கினார். அந்நகர் முழுமை பெற்றதும் அங்கு தை மாதத்தில்தான் முத்தமிழ் சங்கத்தைத் தோற்றுவித்தார். அதன் பிறகே அதாவது, முத்தமிழ்ச் சங்கம் தோற்றுவித்து அங்கு இளமுறியாக் கண்டத்து மக்கள் தமிழ்மொழியை நன்கு கற்றுக் கொண்டபிறகு [சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து] அங்கிருந்த இந்துநதிக் கரையில் இந்து வேதத்திற்காக அருட்பாநகர் என்ற ஒரு நகரை உருவாக்கினார். இந்த அருட்பா நகரில்தான் இந்துவேதங்கள் நான்கும், இந்துவேத நூல்கள் 392உம் (முந்நூற்றுத் தொண்ணூற்று இரண்டு), இந்துவேத சுலோகங்கள் எனப்படும் சூலகங்கள் 4,42,363உம் (நான்கு இலட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து முன்னூற்று அறுபத்தி எட்டு) கற்றுக் கொடுக்கப்பட்டன. இப்படி இந்து வேதாகம பாடசாலை அருட்பா நகரில் நான்காண்டுகள் (48 மாதங்கள்) தொடர்ந்து நடத்தப்பட்டு; முழுநிலவு பருவ பூசைகள் 48 இந்துவேதாகம நெறிமுறைப்படி நிகழ்த்தப்பட்டிட்ட பிறகுதான் அருட்பா நகரை யொட்டியே (மோகம் சிதறா நகர்) மோகஞ்சிதறா நகர் உருவாக்கப்பட்டது என்பார்.
எங்கள் குருதேவர் ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர்,அரசயோகிக் கருவூறார்,’அன்பு சித்தர்’
-கட்டுரையாளர் சோம்நாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *