• Fri. May 3rd, 2024

பத்திரிகையாளர் தனது பணிக்காலத்தில் இறந்து விட்டால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும்.., தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம்!

ByKalamegam Viswanathan

Oct 29, 2023

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில மாநாடு உதகையில் நடைபெற்றது.
தமிழக பத்திரிக்கையாளர்கள் சார்பாக உதகையில் நடைபெற்ற முதல் மாநாட்டில் மாநில தலைவர் ஹரிஹரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பாட்ஷா மற்றும் அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் உதகை மாவட்ட நீதிபதி உதகை சுற்றுலா துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ மனை டீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த சேவையாற்றிய சமூக சேவைக்கான விருதுகள் மற்றும் சிறந்த நிர்வாகிகளுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. அரசால் முறைப்படி பதிவு பெற்ற ஊடகங்களில் பணிபுரிந்து வரும்
செய்தி ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், தாலுகா செய்தியாளர், பக்கம் வடிவமைப்பாளர் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கும் அதேபோல், தொலைக்காட்சிகளில் பணிபுரியும் நிருபர், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் பணிப்பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பீட்டு பாலிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

2. அச்சு ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். நாளிதழ்களுக்கு வழங்கப்படுவது போல வார மாத உள்ளிட்ட பருவ இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் புகைப்படக்காரர்களுக்கும் அரசின் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.

3. பத்திரிகையாளர் தனது பணிக்காலத்தில் இறந்து விட்டால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.

4. பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு அனைத்து பிரிவு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மற்றும் கட்டணச் சலுகை வழங்கிட வேண்டும்.

5. தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் என ஒன்று ஏற்ற வேண்டும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும் போது தாக்கப்பட்டால் அந்த சட்டத்தின் மூலமாக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டு மனை வழங்குவதற்கு பதிலாக, அந்தந்த மாவட்டம் மற்றும் தாலுக்கா வாரியாக மானிய விலையில், “பத்திரிகையாளர் குடியிருப்பு வளாகம்” என பெயரிட்டு வழங்க தமிழக அரசை எங்களது தமிழக பத்திரிகையாளர் வலியுறுத்தி சங்கம் கேட்டுக் கொள்கிறது.

7. பத்திரிகையாளர் ஓய்வூதிய பணிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். மேலும் அரசால் உயர்த்தப்பட்ட ரூ.12 ஆயிரம் இன்னும் வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க எமது சங்கம் அரசை கேட்டுக் கொள்கிறது.

8. மக்கள் நலப்பணிக்காக தங்களேயே அர்ப்பணித்து வரும் சிறந்த பத்திரிகையாளர்களை தேர்வு செய்து, ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

9. (இது ஒரு முக்கிய தீர்மானம் இதை வாசித்து முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்ப கேட்டுக் கொள்கிறேன்) பத்திரிகையை பாமரனும் வாசிக்கும் வகையில் வடிவமைத்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் மதுரையில் சிலையும், திருப்பரங்குன்றம் சாலைக்கு
சி.பா.ஆதித்தனார் சாலை என பெயர் சூட்ட வேண்டும். தினமலர் நாளிதழ் நிறுவிய அமரர் டி.வி.ராம சுப்பையர் அவர்களின் சமூகப் பணியைப் பாராட்டியும், குரல் அற்றவர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும், தமிழ்ச் சமூகத்திலும், பத்திரிகை உலகிலும் இன்றுவரை தவிர்க்க முடியாத பத்திரிகையாக திகழும் ஜூனியர் விகடன் நிறுவிய, பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு மத்திய அரசு ‘பத்ம விருது’ மற்றும் ‘பாரத ரத்னா’ வழங்கி கவுரவிக்க வேண்டும். என முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

10. எழுத்துக்களின் மூலம் சுதந்திரத்திற்கு எழுச்சி உணர்வுகளை ஊட்டிய, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் பிறந்த டிசம்பர் 11ஆம் தேதியை பத்திரிகையாளர் தினமாக அறிவிக்க வேண்டும்.

11. பத்திரிகையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்கிட வேண்டும்.

12. வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன் உட்பட அனைத்து கடன்களையும் வழங்குவதில் பத்திரிகையாளர்களுக்கு கடுமையான விதிமுறைகள் மற்றும் தாமத நடைமுறைகளை பின்பற்றாமல், அதற்குரிய நடைமுறையை வங்கிகள் எழுமைப்படுத்தின மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

13. சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்களுக்கு சுங்க கட்டணத்திலிருந்து விலக்கு அளித்திடும் படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

14. பத்திரிகையாளர்களுக்கு நல வாரியத்தின் மூலமாக வழங்கப்படும் சலுகைகளில் உள்ள குளறுபடிகளையும் குறைபாடுகளையும் சரி செய்து, முறையாக நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நல வாரியத்தின் மூலமாக வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தித் தர ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

15. ஊட்டியில் கட்டிடம் எழுப்புவதற்கு அரசு நிர்ணயத்துள்ள 7 மீட்டர் உயரத்திலிருந்து அதை 11 மீட்டர் உயரமாக மாற்றி அரசாணை வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம் உதகையில் சுற்றுலாத்துறை இன்னும் வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *