• Thu. Dec 5th, 2024

பா.ஜ.க.வினரின் நாக்கை அறுத்திருப்பேன்… மம்தா ஆவேசம்

ByA.Tamilselvan

Aug 30, 2022

நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்திருந்தால் பா.ஜ.க.வினரின் நாக்கை அறுத்திருப்பேன் என பொதுக்கூட்டம் ஒன்றில் மம்தாபானர்ஜி ஆவேச பேச்சு.
கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
அவர் பேசியதாவது…. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜனதா பொய் பிரசாரத்தை பாஜக கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஒவ்வொருவரையும் ‘திருடன்’ என்று பா.ஜனதா முத்திரை குத்துகிறது. நாங்கள் திருடர்கள், அவர்கள் புனிதமானவர்கள் என்பதுபோல் பிரசாரம் செய்கிறது. நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்தால், பா.ஜனதாவினரின் நாக்கை அறுத்திருப்பேன். திரிணாமுல் காங்கிரசிடம் உள்ள பணத்தை பற்றி பா.ஜனதாவினர் பேசுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? ஹவாலா மூலமாக வெளிநாடுகளில் பா.ஜனதா பணத்தை பதுக்குகிறது . 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வெற்றிபெற விடமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *