கவர்னர் ரவி மாணவர்களிடையே அரசியலைப் பரப்புவார் என்ற சந்தேகம் உள்ளதால், மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளார்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: ,மதுரை காமராஜர் பல்கலைப் பட்டமளிப்பு விழாவில் நிகழ்ச்சியில் இணைவேந்தரான எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் வேந்தரானஆளுனர் அறிவித்துள்ளார்.
மேலும், கவர்னர் அலுவலகத்தில் இருந்து இணைவேந்தரான என்னிடம் கேட்க வேண்டும், அவரது அலுவலராவது கேட்டிருக்கலாம், கவுரவ விருந்தினர் ஒருவரை அழைக்கிறார். பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் இடையே ஆளுநர் அரசியலைப் புகுத்தும் செயலில் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் உள்ளது. அதனால், இணைவேந்தர் என்ற முறையில் இந்தியப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.