எடப்பாடி பழனிசாமி ஊழல் பட்டியலை வெளியிடுவேன் செய்தியாளர்களிடம் கோவை செல்வராஜ் பேட்டி
அப்போது அவர் கூறியதாவது; “செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசிய முனுசாமியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அம்மாவால் விரட்டி அடிக்கப்பட்டவர் முனுசாமி. அவருக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் ஓ. பன்னீர்செல்வம் .
ஆனால், ஓபிஎஸ் கட்சிக்கு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்றார் ஜெயலலிதா. விசுவாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை ஜெயலலிதாவிடம் வாங்கியவர் ஓ. பன்னீர்செல்வம். அவரைப் பற்றி பேச யாருக்கும் தகுதியோ, யோக்கியதையோ கிடையாது.எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், அவருடைய ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன். கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டுப் போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள்.ஆனால், கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. கடந்த தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.சசிகலா தற்போது அதிமுகவின் உறுப்பினர். எப்போதும் போல அவர் இருப்பார். மீண்டும் அவரை கட்சியில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அவர் கூறினார்.