• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராஜேந்திர பாலாஜிக்கு விசுவாசமாக இருப்பேன் – சிவகாசியில் இப்படி ஒரு மாமன்ற உறுப்பினரா ?

சிவகாசி மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரைச்சொல்லி பதவியேற்றுக் கொண்ட மாமன்ற உறுப்பினர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி முதன்முதலாக அறிவிக்கப்பட்டு, மேயராக பெண் ஒருவர் அமர உள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், 48 வார்டுகளை கொண்ட சிவகாசி மாநகராட்சியில், 2 அதிமுக உறுப்பினர்களைத் தவிர மற்ற அனைவரும் திமுகவில் இணைந்தனர். இதனால் தற்போது திமுகவின் பலம் 45 ஆக அதிகரித்துள்ளது. இன்று சிவகாசி மாநகராட்சியில் வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதிமுகவைச் சேர்ந்த 9 மாமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இணைந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 30-வது வார்டு பகுதியில் வெற்றிபெற்ற கரை முருகன் என்பவர், பதவி ஏற்கும்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கழக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசியல் ஆசான் ராஜேந்திர பாலாஜி ஆகியோருக்கு என்றும் விஸ்வாசமாக இருப்பேன் என்று சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை திமுகவில் இணைக்க முயற்சி எடுத்து வரும் நிலையில், அதிமுக மாமன்ற உறுப்பினர் இவ்வாறு பேசியிருப்பது அதிமுகவின் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.