• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

40 ஆயிரத்துக்கு 7 லட்சத்துக்கு மேல் வட்டி கட்டி இருக்கேன்… காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த சத்தியா..!

ByKalamegam Viswanathan

Sep 18, 2024

கந்துவட்டி பணம் கேட்டு செல்போன் மூலமாக கொலை மிரட்டல் விடுத்தும், தன்னை தாக்கி பைக், செல்போனை பறித்ததாக கூறி, கீரைத்துறையை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் மீது தெற்குவாசல் காவல்நிலையத்தில் சத்யா என்ற பெண் புகார் மனு அளித்தார்.

மதுரை மாநகர் புலிப்பாண்டியன் தெரு பகுதியை சேர்ந்த சத்யா (49) என்ற பெண் மகளிர் குழுக்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவரிடம் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக ஒரு லட்சம் ரூபாய் மாத வட்டிக்கு 40ஆயிரத்திற்கு கடனாக பெற்றிருந்தாகவும், இதற்காக வட்டியுடன் இதுவரையிலும் 7 லட்சத்திற்கும் மேலாக வட்டி மட்டும் செலுத்தியுள்ளதாகவும், மேலும் மகாலட்சுமியின் உடன் பிறந்த அக்காவான உமாவிடம் கடந்த 8 மாதத்திற்கு முன்பாக 50ஆயிரம் ரூபாய் வார வட்டியாக 5 ஆயிரம் என்ற படி பெற்றிருந்தேன்.

இந்நிலையில் 6 மாதத்திற்கு முன்பாக இந்த கடனுக்காக மதுரை சப்பாணி கோவில் அருகில் இருந்த மகாலட்சுமியின் அலுவலகத்தில் வைத்து தன்னை மகாலட்சுமி தனது கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் அடித்து காயம் ஏற்படுத்தி எனது பைக், மற்றும் செல்போன்கள் இரண்டையும் பிடுங்கிக் கொண்டதாகவும், ஒரு வாரத்திற்கு முன்பாக மகாலட்சுமி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தாக கூறி, மகாலெட்சுமி மற்றும் அவரது சகோதரி உமா ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை தெற்குவாசல் காவல்நிலையத்தில் சத்யா புகார் மனு அளித்தார்.