• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ByP.Thangapandi

Sep 18, 2024

உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்ற தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு போலிசார் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சமூகத்தில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று எடுத்துரைப்பட்டது.

இளம் தலைமுறையினர், தங்கள் செல்போன்களில் எஸ்ஓஎஸ் எனும் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும், எந்த நேரத்திலும் ஆபத்து வரும் போது இந்த செயலி உங்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

தொடர்ந்து பாலியல் குற்றங்களை தடுக்க கல்லூரி மாணவ, மாணவிகளும் உதவியாக இருக்க வேண்டும். அவர் சகோதர, சகோதரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் அன்பரசு கேட்டுக் கொண்டனர்.