• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நான் தவறவிட்ட இந்த படம்.. நடிகர் கார்த்தி வருத்தம்..!!

Byகாயத்ரி

Aug 25, 2022

விருமன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 31-ஆம் தேதியும், சர்தார் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் கார்த்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிக்கவிருந்த,படம் ஒன்றில் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய் வேறொரு நடிகர் நடித்து ஹிட்டான படத்தை பற்றி பேசியுள்ளார். இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் OTT-யில் வெளியான ” சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் முதலில் நடிகர் கார்த்தி தான் நடிக்கயிருந்தாராம். இந்த படத்தின் கதையை இயக்குனர் பா. ரஞ்சித் மெட்ராஸ் படத்தின் போதே கார்த்தியிடம் கூறினாராம். இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு கார்த்தி கையெழுத்துயிட்டு கமிட்டான நிலையில், சில காரணங்களால் அவரால் சார்பட்டா படத்தில் நடிக்கமுடியாமல் போனதாம். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டோமே என்று கார்த்தி நினைத்து பல முறை வருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய,கார்த்தி படத்தில் ஆர்யா மிகவும் அருமையாக நடித்திருந்தார் எனவும், வாத்தியார் கதாபாத்திரத்தில் பசுபதி சார் நன்றாக நடித்திருந்தாகவும் தெரிவித்தார்.