நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 56 பேர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயளாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறுவிப்பில், “தமிழகத்தில் வருகின்ற 19.2.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிடும் 56 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.
