
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பாக மதுரையில் 44,45,46 & 47 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், பாஜக தனித்து போட்டியிடவில்லை மக்கள் கூட்டணியில்தான் சேர்ந்து போட்டியிடுகிறது. திராவிட முன்னேற்ற கழகம், மத்திய அரசிடம் மோதுகின்ற போக்கை தவிர ஆக்கபூர்வமான திட்டம் ஏதும் செய்யவில்லை! வெள்ளை அறிக்கையை கொடுத்தவர் மதுரை அமைச்சர், பொம்மை போல் முதலமைச்சர் உள்ளார்.
கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் ஓட்டை அவருக்கு போட வேண்டும்..மோடிக்கு ஓட்டு போடவில்லை என்றால் அது மகாபாவம் திருவள்ளுவர் கூறியிருக்கிறார்…
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு,
என்ற குறள் படி மோடிக்கு நன்றி கூறி ஓட்டை போட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள் தற்போது பணத்தை கொடுக்கவில்லை யார் யாருக்கு பணம் கொடுப்பது என்பது குறித்து கமிஷன் அமைத்துள்ளனர்.
தேர்தலில் வாக்கு கேட்கும் போது நகை கடன் தள்ளுபடி செய்வோம் அதனால் வீட்டில் உள்ளவர்கள் நகையை வங்கிகளில் வையுங்கள் என்றார் உதயநிதி ஸ்டாலின், ஆனால் தற்போது வரை தள்ளுபடி செய்யவில்லை, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிய உதயநிதியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு கோவிலை இடிக்க வேண்டும் என்று திமுக திட்டமிட்டு உள்ளனர். மதுரையில் 200 ஆண்டுகள் பழமையான தவிட்டு சந்தை பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவிலை இடித்துள்ளனர். 200 ஆண்டுகள் ஒருவர் தங்கி இருந்தால் அந்த இடம் அவர்களுக்கே சொந்தம் அப்படி இருக்கும்போது எப்படி கோயிலை இடித்தனர். திமுக கட்சியினர் பொண்டாட்டியை கோவிலுக்கு அனுப்பிவிட்டு கோவில்களையும் இடிக்கின்றனர். தமிழ் எங்களுக்கு முக்கியம் என்கின்றனர் திமுக. ஆனால் நிதியமைச்சரால் ஒரு வார்த்தையை கூட திக்காமல் தமிழில் பேச முடியாது. மதுரையின் முதல் மேயர் பாஜக உதவியால் வந்தார். தற்போது பாஜக மேயர் வர வேண்டும்! அதற்கு மதுரை மக்கள் உதவ வேண்டும்.’ என்றார்!
