நான் 2ஜி வழக்கை பார்த்தவன் பழிவாங்கும் நடவடிக்கையாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக ஆ.ராசாகுற்றச்சாட்டு.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது” ரூ5 கோடி சொத்து சேர்த்திருப்பதாக என் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த சொத்து என்னுடையது அல்ல.பாஜக அரசையும், அவர்களின் கொள்கைகளையும் சவால்விடும் வகையில் நான்பேசி வருவதால் இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளனர். 2ஜி வழக்கையே பார்த்தவன் நான் இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல என்றார்.