அதிமுகவில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.
சட்டபேரவை எதிர்கட்சிதுணைத்தலைவர் ஓபிஎஸ் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனேஜ்பாண்டியன் ஆகியோரது இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை.இதனால் இபிஎஸ் சட்டமன்றத்தை புறக்கணித்தார்.இந்த பரபரப்பு முடிவதற்கு முன்பு அதிமுகவில் மற்றொரும் ஒரு பரபரப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வரை இபிஎஸ் அணியில்இருந்த சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன்,இன்று திடீர் திருப்பமாக ஓபிஎஸ் அணியில் ஐக்கியமாகியுள்ளார். இபிஎஸ் பக்கம் இருக்கும் இன்னும் பல முக்கிய புள்ளிகளை தங்கள் பக்கம் வளைத்துப்போட ஓபிஎஸ் மாஸ்டர் பிளானை போட்டுள்ளாராம்.இதனால் இன்னும் ஒரு சில வாரங்களில் அதிமுகவில் பல திருப்பங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.