• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நான் பழைய ராகுல் இல்லை -ராகுல்காந்தி பேச்சு

ByA.Tamilselvan

Jan 11, 2023

நீங்கள் பார்க்கும் ராகுல் காந்தி பழைய ராகுல் இல்லை என நடைபயணத்தின் போது ராகுல்காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி.
அரியானாவில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இந்த பாதயாத்திரை உங்களின் பிம்பத்தை மாற்றியிருக்கிறதா? என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘உங்கள் மனதில் என்ன மாதிரியான ராகுல் காந்தியை அடையாளப்படுத்தி இருக்கிறீர்கள்? என தெரியாது. ஆனால் அந்த ராகுல் காந்தியை எப்போதோ கொன்று விட்டேன். இப்போது நீங்கள் பார்க்கும் ராகுல் காந்தி பழைய ராகுல் இல்லை. என் மனதில் ராகுல் காந்தி இல்லை, பா.ஜனதா தான் நினைத்துக்கொண்டு இருக்கிறது’ என்று கூறினார். மேலும் அவர், ‘இது குறித்து குழப்பம் வேண்டாம், இது புரிய வேண்டும் என்றால் நீங்கள் கொஞ்சம் இந்து தர்மம் பற்றி படிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு புரியும்’ என்றும் தெரிவித்தார். பிம்பத்தைப்பற்றி தான் கவலைப்படமாட்டேன் என்றும், அதில் என்றுமே விருப்பம் இல்லை எனறும் கூறிய ராகுல் காந்தி, அதை அடுத்தவர்கள் முடிவு செய்ய வேண்டும் எனவும், அவர் தனது பணிகளை மட்டுமே தொடர இருப்பதாகவும் கூறினார்.