கலப்பு திருமணம் செய்த பெண்ணை சாலையில் வைத்து கணவர் தாக்குதல் நடத்தும் சிசிடிவி வெளியாகி உள்ளது.
செல்வ தேவியை கீழ் ஜாதி பெண் உன்னை திருமணம் செய்ததால் சமூகத்தில் மதிப்பில்லை என காளிதாஸ் குடும்பத்தார், தாக்குதல் நடத்தியதாக பழனிசெட்டிபட்டி காவல் துறையில் புகார் தெரிவித்து, வழக்கு பதிவு செய்யாமல் மெத்தன போக்குடன் செயல்படுவதாக பெண் குற்றச்சாட்டு.
தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதி பரமானந்தம் மகன் காளிதாஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வ தேவி இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து 4 வயதில் யோகித் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கலப்பு திருமணம் செய்த பெண்ணை சாலையில் வைத்து கணவர், செல்வ தேவியை கீழ் ஜாதி பெண் உன்னை திருமணம் செய்ததால், சமூகத்தில் மதிப்பில்லை என காளிதாஸ் குடும்பத்தார், தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையில் வழக்கு பதிவு செய்யாமல் மெத்தன போக்குடன் செயல்படுவதாக செல்வ தேவி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், தேனி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக மது போதையில் கணவர் காளிதாஸ் செல்வதேவியை தாக்கும் வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கணவர் காளிதாஸ், மாமனார் பரமானந்தம், மாமியார் – ருக்குமணி சேர்ந்து தொடர்சியாக சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி, கொடுமை படுத்தி, கொலை முயர்சியில் ஈடுபட்டு செல்வதேவி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.
தற்போது தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் செல்வதேவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்பொழுது செல்வதேவியை சாலையில் வைத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.