பல்லடம் அருகே வெங்கடபுரம் கிராமத்தில் கடன் தொல்லையால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இருவரின் உடல்களை மீட்டு பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரும் இன்று மாலை கடன் தொல்லையால் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவரது மகன் சந்துரு என்பவர் மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்லடம் காவல்துறையினர் இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.