• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம் “வேட்டுச் சத்தம்” பாடல்!

Byஜெ.துரை

Oct 2, 2024

“வே2சிவகாசி பட்டாசுகள்” நிறுவனம் சார்பில் கார்த்திக் கிருஷ்ணன் இசையில்
வேல்முருகன், சன்மிதா பழனி பாடிய பாடல் “வேட்டுச் சத்தம்” பாடல் வெளியானது.

கவிஞர் புன்னியா.C வரிகளில் ஜீவா பிரபுராம் இந்த பாடல் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சக்தி பிரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இது குறித்து பேசிய வேல்முருகன்…….

இந்த பாடலை சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் கடின உழைப்புக்கு சமர்ப்பணம். காலை முதல் மாலை வரை, அவர்கள் தங்கள் திறமையான கைகளால் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் வானில் பிரகாசம் பரப்பும் பட்டாசுகளை உருவாக்குகிறர்கள்.

இந்த பாடல், அவர்களின் ஆற்றல், அர்ப்பணிப்பு மற்றும் சிவகாசியின் புது வண்ணங்கள் நிறைந்த உற்சாகத்தை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கும் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது, வெளிநாட்டு பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்பதையும் பாடல் அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.