


புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள அவுரி திடலில் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மாலை 5 மணி வரை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

