• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மனித சங்கிலி பேரணி

ByP.Thangapandi

Jul 29, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.சி பள்ளிகள் சார்பாக மனித கடத்தல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

உசிலம்பட்டி பள்ளி தாளாளர் ரோஜாமனி முன்னிலை வகித்தார். வளன்சபை இல்லதலைவி அருட் சகோதரி சூசையம்மாள் வரவேற்று பேசினார். இவ்விழாவில் காவல் சார்பு ஆய்வாளர் லீலாவதி மற்றும் சிறப்பு ஆய்வாளர் சாந்தி ஆகியோர்கள் தலைமை ஏற்று மனித கடத்தல் குறித்தும், பெண்கள், பெண் குழந்தைகள், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்லூயிஸ்மெர்சி, உதவி தலைமை ஆசிரியர் விமலா மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சகாயம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைதொடர்ந்து மனித சங்கிலி பேரணி நடைபெற்றது இந்த பேரணியை காவல் சார்பு ஆய்வாளர் லீலாவதி தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து மனித சங்கிலி பேரணியானது தொடங்கி பேருந்து நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் பொது மக்களிடையே மனித கடத்தல் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.