• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்..,

BySeenu

Aug 10, 2025

பயங்கரவாதத்தை ஒடுக்கி பட்டினியால் சாகும் காசா மக்களை காப்பாற்று என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக் தலைமை வகித்தார்.

மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீத் மாநில பொருளாளர் முஸ்தபா,
மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் , மாநில பேச்சாளர் அபுதாஹிர்,

எஸ்.டி.பி.ஐ. மாவட்ட நிர்வாகிகள் இப்ராகிம் பாதுஷா,சிவகுமார் , அப்துல் ரஹீம் ,உமர் ஷரீஃப்,அபுதாஹீர்,செய்தி தொடர்பாளர் மன்சூர் , மகளிர் அணி நிர்வாகி காமில பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தின் போது காசாவில் இஸ்ரேலிய அரசால் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் அங்கே உள்ள குழந்தைகள் பசியால் வாடுகின்றனர் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் குழந்தைகள் தங்கள் கைகளில் காலி பாத்திரங்களை கையில் ஏந்தியவாறு காசாவில் பட்டினியால் வாடும் குழந்தைகளின் நிலையை வெளிக்காட்டும் விதமாக இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர் .

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் கைகளில் உள்ள செல்போன்களின் டார்ச் லைட்டுகளை அடித்து நதன்யாவும் மற்றும் இஸ்ரேலிய அரசுக்கு எதிராக தொடர் கோஷங்களை எழுப்பி ஐநா மற்றும் உலக நாடுகள் உடனடியாக பாலஸ்தீனம் மற்றும் காஜாவில் உள்ள மக்களுக்கு உணவுகள் கிடைக்கவும் மருந்துகள் கிடைக்கும் ஏற்பாடு செய்திட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது இக்பால் நன்றியுரை ஆற்றினார்.