• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் சி.எஸ்.ஐ பள்ளியில்ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா..,

ByKalamegam Viswanathan

Jun 29, 2023

சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுதுபொருள் வழங்கு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார். சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுதுபொருளை நன்கொடையாக வழங்கிய எல்ஐசி முத்துராமன், தலைமையாசிரியர் ஜோயல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிதலைமைஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் வரவேற்றார்.வாடிப்பட்டி வட்டாரகல்விஅலுவலர் அகிலத்துஇளவரசி, வாடிப்பட்டி வட்டாரவள மைய மேற்பார்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருள்கள்,இனிப்புகள் வழங்கினார்கள்.உதவி ஆசிரியை பிரேமாஅன்ன புஷ்பம் நன்றி கூறினார். இதில் ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.