• Sat. Nov 2nd, 2024

சோழவந்தான் அருகே தச்சம்பத்து காளியம்மன் கோவில் திருவிழா..,

ByKalamegam Viswanathan

Jun 29, 2023

சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது இவ்விழா முன்னிட்டு கலந்த 20 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்று பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்தனர். இரண்டாம் நாள் காலை திருவேடகம் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்து வந்தனர். இதில் சுமார் ஆறடி எட்டடி அழகு குத்தி பால்குடம் அக்னிசட்டி எடுத்து வந்தனர். அன்று மாலை வைகை ஆற்றில் இருந்து சக்தி கிரகம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். சுந்தரராஜ பெருமாளுக்கு மாவிளக்கு எடுத்து பூஜையில் செய்தனர். இரண்டாம் நாள் காலை அன்னதானம் நடைபெற்றது. மாலை காளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தனர். இதைத்தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மூன்றாம் நாள் காலை வைகை ஆற்றில் முளைப்பாரி கரைத்தனர். மஞ்சள் நீராட்டுவிழா நடந்தது, சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *