• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் விநியோகம்!

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் சிவசாமி தனது மனைவிக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிக்கும் போது பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் வினியோகம் செய்து கொண்டிருந்தார்.

இதையடுத்து தகவலறிந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் அதிமுகவினர் ஹாட் பாக்ஸ் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் போது கையும் களவுமாக பிடித்தனர். பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் கூறும்பொழுது திமுக வேட்பாளர் கணவர்மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டுமெனவும் இதுபோல பொள்ளாச்சியில் பல பகுதிகளில் திமுகவினர் பொதுமக்களுக்கு ஹாட் பாக்ஸ் கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.