• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழில் அஞ்சல் தலை வெளியிட்ட கனடா பிரதமருக்கு கௌரவ மரியாதை

Byகுமார்

Nov 25, 2021

உலகின் பழமைவாய்ந்த மொழியான தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக கனடா நாட்டு தேசிய கீதத்தை தமிழிலும் வெளியிட்டு அங்கீகாரம் வழங்கியமைக்காவும், தமிழில் அஞ்சல் தலை வெளியிட்ட கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ்களை தபால் மூலம் அனுப்பியது.

மதுரையில் சோழன் உலகப் புத்தக நிறுவனம் சார்பில் கனடா நாட்டு பிரதமருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் தமுக்கம் பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம் மூலமாகவும் அனுப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நிமலன்நீலமேகம், பொதுச்செயலாளர் ஆர்த்திகாநிமலன் மற்றும் குட்டிமணி, தென் மண்டல தலைவர் முனைவர் சுந்தர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் நிறுவனர் நிமலன்நீலமேகம் கூறியது, உலகின் பழமைவாய்ந்த மொழியான தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலையை வெளியிட்டமைக்காகவும் மற்றும் கனடா நாட்டின் தேசிய கீதத்தை தமிழிலும் வெளியீட்டு தமிழர்களுக்கு அங்கீகாரம் வழங்கியதற்க்காகவும், தை மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழர்களை பெருமைப்படுத்தியதற்காகவும், தாங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நாடுகளில் போர்களின் காரணமாக புலம்பெயர்ந்த பல நாடுகளை சேர்ந்த ஏதிலியர்க்கு புகலிடம் வழங்கி அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளித்து உலகவாழ் தமிழ் மக்கள் சார்பாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இந்த பாராட்டுச் சான்றிதழ்களை அனுப்பி வைக்கிறோம் எனக் கூறினார்.