• Fri. Mar 29th, 2024

ராமேஸ்வரத்தில் வீடுவீடாகச் சென்று டெங்கு, மலேரியா தடுப்பு முன்னெச்சரிக்கை

ராமேஸ்வரம் அருகே வீடுவீடாகச் சென்று டெங்கு, மலேரியா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் நோய்தொற்று தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் தங்கச்சிமடம் ஊராட்சிகளில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தோடு டெங்கு, மலேரியா நோய்கள் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் ஈடுபட்டனர்.

தங்கச்சிமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கும் அதிகமான கிராமங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட கொசு மற்றும் புழு ஒழிப்பு பணியாளர்களை பயன்படுத்தி சுகாதார துறையினர் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், தொட்டிகள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றில் கொசு, புழுக்கள் இருக்கின்றதா என்று ஆய்வு செய்து சுத்தம் செய்தனர். மேலும் தண்ணீர் தொட்டிகளில் பிளிச்சிங் பவுடர் போட்டு பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா எதன் மூலம் பரவுகிறது உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *