• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

9.5 லட்சம் ஏழைகளுக்கு வீடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Byகாயத்ரி

Dec 13, 2021

சென்னை எம்.ஆர்.சி நகரில் கிரடாய் சார்பில் ஸ்டேட்காந் 2021 என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: “வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக கட்டுமானத்துறை உள்ளது. கட்டுமானத்துறை எப்போதும் வளரும் தொழிலாக உள்ளது.

ஒரு நாடு வளர்ந்து வருவதை வெளிப்படையாக காட்டுவது கட்டுமானம் தான். மாநிலத்தின் மொத்த வளர்ச்சிக்கும் கட்டுமானத்துறை பெரிதும் உதவுகிறது. வேளாண்மைக்கு அடுத்து கட்டுமானத்துறை அதிகம் பேருக்கு வேலை வழங்குவதாக உள்ளது. கட்டுமானத்துறை மூலம் அரசுக்கு ரூ.5,976 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்கள் மூலம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சமூகம் பற்றி தெரிந்து கொண்டோம். தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்கும் அரசு உதவுகிறது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வீட்டு மனைகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. 9.5 லட்சம் ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.2031-க்குள் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். விண்னப்பித்த 60 நாளில் மனைகள், மனை பிரிவுக்கு சிங்கிள் சிஸ்டத்தில் அனுமதி வழங்க உள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக 12 மண்டல திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளோம்” என அவர் கூறினார்.