ஆடி அமாவாசை தினமான இன்று குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடலில் மற்றும் குழித்துறை ஆற்றில். குடும்பத்தில் மறைந்து போன பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள் நினைவாக இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினார்கள்.

கடற்கரையில் புரோகிதர்கள் வேதமந்திரம்,ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள். பலி தர்ப்பணம் செய்பவர்கள்,வாழை இலையில் பலிபொருட்களை பெற்று, புரோகிதர்கள் வேதமந்திரம் ஓத அவற்றை தலைமையில் சுமந்து சென்று கடலில்,ஆற்றில் மூழ்கி பலி தர்ப்பணம் செய்தார்கள்.
கன்னியாகுமரி கடலில் முன்னோர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும்
ஆடி, புரட்டாசி,தை அமாவாசை நாட்களில் பலி கர்ம பூஜை செய்வது வாடிக்கை என்றாலும். வருடத்தில்”ஆடி” மாதத்தின் அமாவாசையே தனித்த சிறப்பு பெற்ற நாளாகும்.

ஒவ்வொரு ஆடி அமாவாசை தினத்தில் கன்னியாகுமரி முக்கடல் சங்கம் பகுதியில். நீலக் கடலுக்கு எதிரே ஒரு மக்கள் கடல் போல் ஆண்களும், பெண்களும் பெரும் கூட்டமாக இருப்பது ஆடி அமாவாசை தினத்தில் கண்ட காட்சி.
குமரியின் இப்போதைய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஸ்டாலின் நேற்றே கன்னியாகுமரி வந்து மக்கள் கூடும் கடற்கரை பகுதியில் இரண்டு பக்கமும் பாதைகளுடன் கூடிய தடுப்புகள் அமைத்து மக்கள் நெருக்கம் இல்லாமல், இயல்பு நிலையை நேரில் நின்று திட்டம் இட்டு செய்த புதிய ஏற்பாட்டில் கடற்கரை பகுதியில் இதுவரை ஒருவரை இடித்து தள்ளி, முண்டியடித்து செல்லும் நிலை இல்லாத இயல்பு நிலையை காண முடிந்தது.
ஆடி அமாவாசை தினமான இன்று அதிகாலை 02.30 மணிக்கு குமரி பகவதியம்மன் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.