கோவை மாவட்டத்தில் 45வது சகோதயா பள்ளிகளுக்கு இடையே ஹாக்கி விளையாட்டுப் போட்டி சுகுணா பெப் பள்ளியில் மூன்று நாட்கள் நடைப்பெற்றது. அப்போட்டியில் அல்கெமி பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். மிக மூத்தோர் மரிவில் மாணவிகள் 3-ம் இடத்தையும், மாணவர்கள் 4-ம் இடத்தையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தின் தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.