கோவையில் அமரன் திரைப்படத்தை இலவசமாக பார்க்க, இராணுவ முப்படை அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர், 700 பேருக்கு, கோவை பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகியது.
நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில் கோவையில் சூலூர்,ரேஸ்கோர்ஸ்,கோவைபுதூர் போன்ற பகுதிகளில் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள்,மற்றும் அதிகாரிகள் பலர் அவரது குடும்பத்தினர்களுடன் வசித்து வருகின்றனர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில், கோவை விமான நிலையம் அருகில் உள்ள பிராட்வே சினிமாஸில் , 700 பேருக்கு, அமரன் திரைப்படம் பார்க்க, இலவச காட்சிக்கு பிராட்வே சினிமாஸ் நிர்வாகத்தினர் அனுமதி அளித்தனர்.
இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த,110 காலாட்படை பட்டாலியன்,
இந்திய பீரங்கிப்படை 35 களப் படைப்பிரிவு இந்திய கடற்படை ஐஎன்எஸ் அக்ரானி,இந்திய விமானப்படை 43 ஏர் விங்,மற்றும் இந்திய விமானப்படை நிர்வாகக் கல்லூரி என இராணுவத்தின் முப்படைகளை சேர்ந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் சுமார் 700 பேர் அமரன் படத்தை பார்த்து ரசித்தனர்.
பிராட்வேஸ் சினிமாஸின் எபிக் மற்றும் ஐமேக்ஸ் என இரண்டு ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டது.
திரைப்படம் பார்க்க வந்த இராணுவ அதிகாரிகளை பிராட்வே சினிமாஸ் நிர்வாக இயக்குனர் வி.ஆர்.ஆர்.சதீஷ் குமார்,தலைமை செயல் அலுவலர் தேஜல் சதீஷ்,மற்றும் திட்ட இயக்குனர் நேஹா சதீஷ் ஆகியோர் வரவேற்றனர்.
இந்திய இராணுவத்தின் வீரம் மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த காட்சியை ஏற்பாடு செய்தததாக பிராட்வேஸ் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.